 |
பல ஆண்டுகளாக ஆங்கிலக் குறுக்கெழுத்துக்களின் விடை கண்டுபிடித்து வரும் நானும் என் மனைவி அம்ருதாவும் கலிஃபோர்னியாவில் ஜனவரி 2009ல் ‘தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் பார்த்தவுடன் அதன் தீவிர இரசிகர்களானோம். 2009 முதல் நாங்களும் அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) புதிர்களை ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் அமைத்தோம்.
2009 முதல் 2017 வரை எட்டு வருடங்கள் , 140 புதிர்கள் அமைத்த பிறகு அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) புதிர் அமைப்பதிலிருந்து நானும் என் மனைவி அம்ருதாவும் ஓய்வு எடுத்தோம். மறைபுதிர் (Cryptic) குறுக்கெழுத்தின் பொற்காலம் அது. வாஞ்சிநாதன் காட்டிய வழியில் எங்களுடன் ஹரி பாலகிருஷ்ணன், ராமராவ், முத்துசுப்ரமண்யம், ஆர்.வைத்தியநாதன், திருமதி பூங்கோதை மற்றும் திருவாளர்கள் மனு, யோசிப்பவர், இலவசக்கொத்தனார், நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், திருமூர்த்தி, கே ஆர் சந்தானம் எனப் பலர் புதிர்கள் அமைத்தனர். தற்பொழுது யாருமே கட்டங்களுடன் புதிர் அமைப்பது இல்லை.
தினமலர், குமுதம், பெண்மணி மற்றும் சில பத்திரிகைகளில் குறுக்கெழுத்து வெளியிடப் படுகிறது. ஆனால் மறைபுதிர் குறுக்கெழுத்து கிடையாது. புதிராடுகளத்தில் அபாகு-1 பார்த்தபின் மறுபடியும் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. அதன் விளைவே இந்த PIK (பார்த்தசாரதியின் இருமொழிக் குறுக்கெழுத்து). மறுபடியும் கட்டங்களுடன் புதிரமைப்பது எனக்குப் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு மாதமும் இருபதாம் தேதி வெளியிடும் எண்ணம் உள்ளது. கடவுள் சித்தம் எப்படியோ?
மே 11, 2020 முதல் ஒவ்வொரு தினமும் காலை ஏழு மணிக்கு பா பு (பார்த்தசாரதியின் புதிர்கள்) வெளியிடுகின்றேன். தினமும் மூன்று குறிப்புகளுடன் தொடங்கிய புதிர் 01-09-2023 முதல் நான்கு குறிப்புகளுடன் வெளிவருகிறது- 1. தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு, 2. EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு, 3. தமிழ் குறிப்புகள் - English Answers குறுக்கெழுத்து குறிப்பு 4. Pictorial Puzzle.
நினைவில் கொள்ளுங்கள்
PIK (பார்த்தசாரதியின் இருமொழிக் குறுக்கெழுத்து) - ஒவ்வொரு மாதமும் இருபதாம் தேதி
பா பு (பார்த்தசாரதியின் புதிர்கள்) தினமும் காலை 7.00 மணி - இங்கே க்ளிக் செய்யவும்
|