2006லிருந்து மார்கழி எனக்கும் என் மனைவிக்கும் முக்கியமான மாதம். தினமும் காலை 5.45க்கு வீட்டின் அருகிலுள்ள சத்ய வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் செல்வோம். வீட்டிற்கு வந்தபின் அவசரமாக (மனைவி) சமைத்து இருவரும் உண்ட பின் கச்சேரிகள் கேட்க மைலாப்பூர் செல்வோம். இரண்டு கச்சேரிகளாவது கேட்டபின் வீட்டிற்கு வந்தும் Jaya TV, வசந்த் TV என்று கச்சேரிகள் தொடரும். 2016ல் அபாகு குறுக்கெழுத்துக்களும் மாதம் இருமுறை அமைத்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை வீட்டு ரிப்பேர்களும் இருந்ததால் குறுக்கெழுத்து அமைக்க முடியவில்லை. அப்போது நான் எழுதிய 'கவிதை'.
ஆதவன் எழுமுன்னரே திருப்பாவை முப்பதும் தப்பாமே
மாதவன் சத்யவரதராஜனுக்கு வணக்கம் செலுத்தியபின்
கயிலைநாதர் போற்றும் கர்நாடக இசை
மயிலையில் மட்டுமே அதிகம் கிடைப்பதால்
உண்டியாக்கி பிரசாதப் பொங்கலுடன் உண்டபின்
வண்டியெடுத்து ஓடும் எங்களை
பாழும் நேரம் குறுக்கெழுத்து அமைக்க விடவில்லையே
ஏழுநாள் காக்க அன்போடு வேண்டுகிறோம்
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அம்ருதா & பார்த்தசாரதி , டிசம்பர் 31, 2016
இவ்வருடம் கச்சேரிகள் ஆன்லைனில் கேட்கின்றோம். ஆனால் கோவில் செல்ல முடியவில்லை. அதனால் இந்தத் திருப்பாவை ஸ்பெஷல். இன்று மார்கழி 6. ஆகவே முதல் 6 திருப்பாவைகளில் இருக்கும் ஏதாவது ஒரு சொல் அந்த எண் கொண்ட குறிப்பில் இருக்கும்.
உங்களுக்குத் திருப்பாவை தெரிந்திருக்கத் தேவையில்லை. குறிப்புகளில் இருந்தே solve செய்யலாம்.
அடுத்தத் திருப்பாவை ஸ்பெஷல் மார்கழி 12 அன்று (பா பு - 231 27-12-2020).
|
1.மன்மோகன் வேகம் குறைந்தால் காட்டுராஜா (4)
2.பாற்கடலில் துயிலும் இறைவன் பாதம் பாதி மனதாரப்படித்தால் கிடைக்கும் (5)
3.வாரிக் கொடுத்து கைசிவப்பவர் பாரி (4)
4.தங்கம் வென்றவன் தொழில் தொடங்கப் பணம் இடையில்லாது வழங்குவான் (5)
5.ஜாதியில் இலாகாவுடன் போனதால் லத்திகா இனி குல்லாவுடன் கலக்குவாள் (6)
6.ஸ்வரப்பானை உருளும் (4)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |